்
இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கல்லூரி ஆசிரியர் சங்க கட்டடத்தில் டிட்டோஜாக் கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது, பின்பு அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்ட போது பிப்ரவரியில் பேரணி மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்ட போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்கனவே எடுத்த தனது நிலைப்பாட்டில் மாறாமல் பிடிவாதம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது
. இதை குறித்து மற்ற 6 சங்கங்கள் ஆட்சேபம் தெரிவிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் மற்ற 6 சங்கங்கள் இணைந்து பிப்ரவரி 2ஆம் தேதி மாவட்ட அளவில் பேரணி நடத்துவது என்றும், போஸ்டர், துண்டு பிரசுரம் மற்றும் செலவு ஆகியவை அனைத்து சங்கங்களும் ஏற்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து அனைத்து சங்கங்களும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை டிட்டோஜாக் அமைப்பில் இருந்து நீக்கி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment