4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொழில் நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் தொடங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு கணினி தொடர்பான கல்வி அறிவு இருந்தால்தான் கல்லூரி படிப்பிற்கு செல்லும்போது எளிதில் எதையும் கையாள முடியும் என்பதால் மத்திய அரசு கணினிக் கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது
. அதன் அடிப்படையில் தமிழக அரசு 4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்வி குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் உத்தேசமாக ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்குகிறது. மொத்தம் ரூ.86 கோடி செலவில் 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கணினிக் கல்வி கற்பிக்கப்படும். இதற்கான டெண்டர் பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் கோரப்பட்டுள்ளது
. திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் ஒப்படைத்தல் மூலம் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் கணினி கல்வி அறிவை பெற முடியும். ஏற்கனவே அரசு சார்பில் பிளஸ்–2 மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாக வழங்கப்படுகிறது. மடிக்கணினியை பள்ளி மாணவர்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இத்திட்டம் உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment