இதுதொடர்பாக மருத்துவ தேர்வுக்குழு செயலாளரும், மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனருமான டாக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
திங்கட்கிழமை முதல் விண்ணப்பம் நர்சிங் பட்டய படிப்புக்கு (டிப்ளமோ) 2013–2014–ம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (12–ந்தேதி) முதல் 22–ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள செமினார் ஹாலில் வழங்கப்பட உள்ளது. பிளஸ்–2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் விண்ணப்ப படிவங்களை முதல்வர், சென்னை மருத்துவக்கல்லூரி, சென்னை 600 003 என்ற முகவரிக்கு கேட்பு கடிதம் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.200. (ஆதி திராவிடர்கள், பழங்குடியினருக்கு விண்ணப்பம் இலவசம்).
தேர்வு கட்டணத்தை ‘‘செக்ரட்டரி, செலக்ஷன் கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை–10’’ என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக எடுக்க வேண்டும். ஆதி திராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகியோர் சாதி சான்றிதழின் சான்றொப்பம் பெறப்பட்ட 2 நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 22–ந்தேதி ஆகும். இவ்வாறு டாக்டர் சுகுமார் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment