அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,023 உதவிப் பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நியமிக்க உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 33 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 19-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன
.இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வாங்கவும், சமர்ப்பிக்கவும் கடைசி தேதி ஜூலை 10 என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது கடைசி தேதி ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தப் பணியிடங்களுக்கு பணி அனுபவம், நேர்முகத் தேர்வு மூலம் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 1,023 பணியிடங்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து அனுப்பப்பட்டன.இதுவரை 40 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையில் மாநிலக் கல்லூரியிலும், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன.
சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
No comments:
Post a Comment