தமிழகத்தில் அக்., 1 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதால், 100 சதவீத வாக்காளர் சேர்க்கையை கணக்கில் கொண்டு, அதிக கவனம் செலுத்த கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுச்சாவடி வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வீடு, வீடாக சென்று வாக்காளர்பட்டியல் சரி பார்க்கும்பணி செய்கின்றனர். இப்பணி, செப்., 15 வரை நடக்கிறது. முன்னதாக செப்., 7, 14, 21 தேதிகளில், சிறப்பு முகாம் நடக்கிறது. அக்.,1ல், வரைவு வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
பின், 2013 ஜன.,1 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களிடம் புதிய வார்க்காளர்களாக சேர விண்ணப்பங்கள் பெறப்படும். இறுதிவாக்காளர் பட்டியல் 2013, ஜன., 5 வெளியிடப்பட உள்ளது. இதற்குள் 100 சதவீதம் வாக்காளர் சேர்க்கைக்கு கலெக்டர்கள் தீவிர கவனம் செலுத்துமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment