அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி 30 நாள்களிலிருந்து 60 நாள்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 4-ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: பஸ் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் 30 நாள்களுக்கு முன்பு முன் பதிவு செய்து கொள்ளும் வசதி, இப்போது 60 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் நீட்டிப்பு செய்துள்ளது. இதன் மூலம் தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 8-ம் தேதி பயணிக்க விரும்பும் பயணி செப்டம்பர் 9-ம் தேதியே முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் சென்னை புறநகரில் வசிக்கும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, முன்பதிவு செய்துள்ள பெருங்களத்தூர், மேல்மருவத்தூர் பகுதி பயணிகள் அந்தந்த இடங்களிலேயே பஸ்ஸில் ஏறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் இனி கோயம்பேடு பஸ் நிலையம் வரத் தேவையில்லை. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இப்போது இயங்கி வரும் 50 முன்பதிவு மையங்கள், வரும் காலங்களில் 300 மையங்களாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment