பிரதமர் மோடி கடந்த வாரம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதைதொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வங்கிகளில் போராடி வருகின்றனர். எனினும் வங்கிகளில் பழைய 500, 100 ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட அளவே மாற்ற முடியும் என்ற அறிவிப்பையும் வெளியட்டது.
* விவசாயிகள் வாரத்திற்கு ரூ.25 ஆயிரம் பணம் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனை பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் டெல்லியில் அறிவித்தார். விவசாய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் வங்கயில் எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். செக் மூலம் டெபாசிட் செய்த பணத்தில் இருந்து விவசாயிகள் இந்த அதிகபட்ச தொகையை எடுத்து கொள்ளலாம்.
* திருமணத்திற்கு வங்கி கணக்கில் இருந்து 2.5 லட்சம் வரை பணம் எடுத்து கொள்ளலாம் என்று கூறினார். திருமண நிகழ்ச்சி நடைபெறுவதற்குரிய ஆவணங்களை வங்கியில் முறையாக காண்பித்து பணம் எடுத்து கொள்ளலாம்.
* பழைய நோட்டுகள் வங்கியில் மாற்றுவது ரூ.4,500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்கப்படுகிறது என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இந்த முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
* விவசாய பொருட்களை வாங்கும் வர்த்தகர்கள் வாரம் 50,000 ரூபாய் வரை பணம் எடுத்து கொள்ளலாம்.
* பயிர்கடனை திருப்பி செலுத்த 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
* பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் அல்லது அதற்குரிய செல்லும் ரூபாய் நோட்டுகள் ரூ.2,000 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
* ரயில்வே, மத்திய பொதுத்துறை நிறுவன குரூப் சி ஊழியர்கள் சம்பள அட்வான்ஸ் ரூ.10,000 பெறலாம்.
No comments:
Post a Comment