பெட்ரோல் பங்க்கில் பழைய 500 ரூபாய் நோட்டு நாளை வரை மட்டுமே செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 15-ம் தேதி வரை பெட்ரோல் பங்க்கில் பழைய ரூ.500 செல்லும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இந்த அறிவிப்பில் மாற்றம் செய்து நாளை (டிசம்பர் 2) மட்டுமே மாற்ற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை விமான நிலையங்களிலும் நாளை வரை மட்டுமே மாற்ற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் டிசம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
மேலும் பெட்ரோல் பங்குகளிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்காத பெட்ரோல் 'பங்க்' மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் டிசம்பர் 15-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இன்று புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாளை வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் மாற்ற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment