தமிழகத்திலுள்ள 5,720 அரசு பள்ளிகளில் போதிய கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2014ல் மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:
நடப்பு கல்வியாண்டில் அரசு திட்டமிட்டபடி 23 ஆயிரம் கழிப்பறைகளை கட்டி முடிக்க வேண்டும். 2017-18ம் கல்வியாண்டில் அரசு பெண்கள் பள்ளிகள் மற்றும் இருபாலர் பயிலும் பள்ளிகளில் கழிப்பறை கட்டியிருக்க வேண்டும். 2018-19ம் கல்வியாண்டில் மீதமுள்ள ஆண்கள் பள்ளிகளில் கழிப்பறை அமைக்க வேண்டும். 2019ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் இலவச நாப்கின் வழங்க வேண்டும்.
இதனை அழிப்பதற்கான எரியூட்டும் தளத்தை ஓராண்டுக்குள் அமைக்க வேண்டும். அடுத்த ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் குறைந்தது ஒரு இரவு காவலரை நியமிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் இருக்க வேண்டும். 3 வருடத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment