இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, November 16, 2016

மை வைப்பதில் மாற்றம் இல்லை

'வங்கிகளில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டு களை மாற்றுவோருக்கு, வலது ஆட்காட்டி விரலில் மை வைக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனைத்து வங்கிகளுக்கும், இந்திய ரிசர்வ் வங்கி, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு, அழியாத அடையாள மையை, இந்திய வங்கி கள் அமைப்பு சப்ளை செய்யும். முதலில், சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில், இது
அறிமுகம் செய்யப்படும். பின், தேவைக்கேற்ப, மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்

* ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும், ஐந்து லிட்டர் மை வழங்கப்படும். வங்கி காசாளர் அல்லது வங்கியால் நியமிக்கப்படும் அதிகாரி ஒருவர், பழைய நோட்டுகளை மாற்றுவோரின் கையில் மை வைக்கலாம்

* நோட்டுகளை மாற்றுவதற்கு முன், அந்நபரின் கை விரலில் மை வைக்க வேண்டும்.
இல்லையேல், மையை அழித்துவிட வாய்ப்பு உண்டு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காத்திருக்காத வங்கிகள்!

மத்திய அரசு அறிவித்தபடி, வங்கி கிளைகளுக்கு, அடையாள மை வழங்குவது குறித்து, நேற்று முன்தினம் இரவு வரை, அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. அதனால், பஞ்சாப் நேஷனல் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி போன்றவை, கடைகளில் இருந்து அழியாத மையை வாங்கின; வாடிக்கை யாளர்கள் கைகளில், நேற்று வைக்க துவங்கின.

ரிசர்வ் வங்கி, வலது கையில் வைக்க வேண்டும் என கூறியிருந்தும், இடது ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியும்,பழைய நோட்டுகளை மாற்றித் தருவதால், அங்கு நோட்டு களை மாற்றியவர்கள் விரலில், அடையாள மை வைக்கப்பட்டது.

மை இல்லை!

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தேசிய வங்கிகளுக்கு, நேற்று அழியாத மை வந்து சேரவில்லை. அதை எங்கு வாங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், அந்த வங்கிகள்வாங்க வில்லை. அதனால், அந்த வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றியவர்களுக்கு, நேற்று மை வைக்கவில்லை.

மைசூரில் தீவிரம்!

அடையாள மை தயாரிக்கும் பணி, கர்நாடக மாநிலம், மைசூரு பெயின்ட் நிறுவனத்தில் தீவிரமடைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் அடையாள மை, மத்திய அரசின் தேசிய பரி சோதனை அபிவிருத்தி கழகம் மூலமாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப் படுகிறது; தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப் படுகிறது.

சலவை மை!

மைசூரில் இருந்து, அழியாத மை வருவதற்கு தாமதம் ஆகும் என்பதால்,சலவை கூடங்க ளில், வெள்ளை வேட்டிக்கு வைக்கப்படும் மையை பயன்படுத்தும்படி, பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு, தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று, தேர்தல் துறை, வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அப்போது, தேர் தல் துறையிடமோ அல்லது மாநகராட்சி யிட மோ கைவசம் உள்ள மையை, வங்கி களுக்கு தருவது என, முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment