புயலுக்கு அது மையம் கொண்ட வானியல் ரீதியான புள்ளி விவரத்தைக் கொண்டே பெயரிடப்பட்டு வந்தது. அல்லது தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே அது எந்தமாதிரியான புயல் என குறிப்பிடப்பட்டு வந்தது. இதைக் குறிப்பிடுவதற்கும், செய்தியாக மாற்றுவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் மிகவும் கடினமாக இருந்ததால் பின்னர், புயல் தோன்றும் காலத்தை ஒட்டி, நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் பெயர்களில் புயல்கள் அழைக்கப்பட்டன.
1900-க்குப் பின்னர்தான், புயலுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் உலக அளவில் தோன்றியது. ஆரம்பத்தில், பெண்களின் பெயர் தான் புயலுக்கு வைக்கப்பட்டு வந்தது.
1979-க்குப் பின்னர் தான், ஆண்கள் பெயரிலும் பெயர் வைக்கப்பட்டது. இதன் பின்னர், ஒவ்வொரு கடல் பகுதி ரீதியாக புயலின் பெயர் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. பசிபிக் கடல் பகுதி, வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதி என வெவ்வெறு கடல் பகுதிக்கு தனித்தனியே பெயர் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.
2021-ம் ஆண்டு வரைக்குமான பட்டியலை இப்போதே தயார் செய்து வைத்திருக்கிறார்கள். இதேபோல, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் புயல் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருக்கிறது. வடஇந்திய கடற்பகுதியில் உள்ள நாடுகள் புயல்களின் பெயர்களைத் தீர்மானிப்பார்கள்.
அதன்படி தற்போது வங்கக் கடலில் உருவாகி உள்ள புயலுக்கு 'நாடா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஓமன் நாட்டு வானிலை இலாகா அதிகாரிகள் பரிந்துரைப்படி, இந்த புயலுக்கு நாடா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. லத்தீனைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வார்த்தைக்கு, ஒன்றுமில்லை (nothing) என்று பொருளாகும்.
No comments:
Post a Comment