தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் முத்துப்புதூர் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்; மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழுவின் தீர்மானங்களை, செயலாளர் கிருஷ்ணசாமி முன்மொழிந்தார்.
இதில், தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை, உடனடியாக அறிவிக்க வேண்டும். தினசரி கேட்கப்படும் புள்ளி விவரங்களால், பள்ளியின் கற்பித்தல் சூழல் பாதிக்கிறது. இயக்கத்தின் முதல் கட்ட, வட்டார ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தவும், கடந்த ஊதியக்குழுவில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை சரி செய்யவும், புதிய கல்வி கொள்கையின் பாதகமான அம்சங்களை களையவும், தகுந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு ஊக்க ஊதிய வழங்க வேண்டும்' என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, மாநில தழுவிய அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில், உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மூன்றாம் கட்டமாக, டிச., 28ல், நடைபெறும் கோரிக்கை முழக்க தொடர் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான ஆசிரியர்கள் பங்கேற்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் கனகராஜா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment