வீட்டுக்கடனுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கடந்த முறை 6.25 சதவீதமாக குறைத்தது. இவ்வாறு பல முறை ரெப்போ வட்டி குறைக்கப்பட்டபோதும், வங்கிகள் இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை. சராசரியாக 0.6 சதவீதம் மட்டுமே பலன் வழங்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து சில வங்கிகள் வட்டி குறைப்பை அறிவித்தன. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன் வட்டியை மேலும் 0.15 சதவீதம் குறைத்திருக்கிறது. அதாவது 75 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு வட்டி விகிதம் 9.15 சதவீதமாக இருக்கும். பெண்களுக்கு கூடுதல் சலுகையாக 9.1 சதவீதத்தில் கடன் வழங்கப்படும். புதிதாக வீட்டுக்கடன் வாங்குவோர் மட்டுமின்றி வேறு வங்கியில் இருந்து வீட்டுக்கடனை பாரத ஸ்டேட் வங்கிக்கு மாற்றுபவர்களும் தங்களது இஎம்ஐ தவணை கட்டணத்தை குறைக்கலாம் என இந்த வங்கி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment