எட்டாம் வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, வரும், 25ல், டில்லியில், மாநில கல்வித்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டாயமாக இலவச கல்வி அளிக்க வேண்டும். இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் யாரும், பெயில் ஆக்காமல், பாஸ் செய்யப்படுகின்றனர். இத்திட்டத்தால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துள்ளதாக, மத்திய அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதனால், 'ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்வது அல்லது ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் என்று, மாற்றம் செய்வது, 10ம் வகுப்பு வரை, கட்டாய கல்வி வழங்குவது' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து மாநில பள்ளிக் கல்வி அதிகாரிகள் அடங்கிய, மத்திய ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கமிட்டி, ஆறு மாதங்களுக்கு முன், மாநிலங்களின் ஆலோசனைகளை பெற்றது. மீண்டும், அக்., 25ல், டில்லியில், அனைத்து மாநில கல்வி அதிகாரிகளிடம் கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்துகிறது
No comments:
Post a Comment