நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. கடந்த சில வருடங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்க இயலாத நிலையில் உள்தாள் ஒட்டப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஜனவரி மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்க அனைத்து ரேஷன் கடைகளிலும் நவீன எலக்ட்ரானிக் கருவி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், புதிய ரேஷன் கார்டுகளுக்கு ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வீடுகளில் கள ஆய்வு செய்த பின்னர், புதிய குடும்ப அட்டை 2 மாதத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment