இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, October 14, 2016

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க...'மொபைல் ஆப்!".தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்த முடிவு


அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க, 'மொபைல் போன் ஆப்' கொண்டு வரப்பட உள்ளது.

ஒவ்வொரு தலைமை ஆசிரியரும், தினமும், ஏதாவது ஒரு வகுப்பில், மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்துவதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் செயல்பாடு, ஆர்வம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். பின், அது பற்றிய குறிப்புகளை, அதற்கான பதிவேட்டில் எழுத வேண்டும். ஆனால், பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள், இதை செய்வதில்லை. பதிவேட்டில் மட்டும், 'ஆசிரியர் சிறப்பாக பாடம் நடத்துகிறார்' என, எழுதி விடுகின்றனர்.

அதனால், ஆசிரியர்களின் திறன், அவர்களின் நிறை, குறைகள் மற்றும் மாணவர்களின்
செயல்பாடுகள் தெரிவதில்லை. இந்நிலையை போக்க, தனியார் பல்கலை உதவியுடன், மொபைல் போன் ஆப் எனப்படும், செயலி உருவாக்கப்படுகிறது. இந்த செயலி மூலம், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், அந்தந்த மாவட்ட மற்றும் மாநில தலைமை அதிகாரிகளுடன் இணைக்கப்படுகின்றனர்.

தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பதை கண்காணிக்கும் போது, மொபைல் ஆப் வசதியை, 'ஆன்' செய்து, புகைப்படம் எடுக்கலாம்; ஆசிரியர் பாடம்
நடத்துவதை, 'ஆடியோ' பதிவு செய்யலாம்; 'வீடியோ'வும் எடுக்கலாம். அதை அப்படியே,
அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். விரைவில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

'ஆப்' எப்படி செயல்படும்?
* ஆசிரியர் பாடம் நடத்தும் போது, அந்த வகுப்புக்கு செல்லும் தலைமை ஆசிரியர், பாடம்
நடத்தப்படுவதை, மொபைல் ஆப்பில் உள்ள கேமரா மூலம் படம் எடுக்க வேண்டும்
* பின், அதில் கேட்கப்படும், 10 வகையான தகவல்களை, தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்
* ஆசிரியர் கூறும் அறிவுரை, பாடம் நடத்தும் விதம், என்ன பாடம், மாணவர்களின் கேள்வித் திறன், ஆசிரியர் அளிக்கும் பதில் என, ஒவ்வொன்றையும், தனி பதிவுகளாக நிரப்ப வேண்டும்
* கடைசியில், ஆசிரியர் எப்படி பாடம் நடத்தினார்,
எப்படி நடத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்
* உயரதிகாரிகள், புகைப்படம் மற்றும் பதிவுகள் மூலம், ஆசிரியர்களின் திறனை நேரலையாக அறியலாம். தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில்
ஈடுபடுகின்றனரா என்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த தகவல்கள் அனைத்தும், சர்வரில் ஏற்றப்பட்டு, தேவைப்படும் போது, நேரம், தேதியுடன் ஆய்வு செய்ய முடியும்.

No comments:

Post a Comment