ரெயில் பயணிகளுக்கு 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம்வரை விபத்து காப்பீடு அளிக்கும் திட்டத்தை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.), 3 காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் இ–டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 1–ந்தேதி தொடங்கிய இத்திட்டத்தின்கீழ் காப்பீட்டு வசதியைப் பெற இதுவரை ஒரு கோடியே 20 லட்சத்து 87 ஆயிரம் பயணிகள் பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, 92 காசு கட்டணத்தை ஒரு காசாக ஐ.ஆர்.சி.டி.சி. தற்காலிகமாக குறைத்துள்ளது. இன்று முதல் இம்மாதம் 31–ந்தேதி வரை இ–டிக்கெட் பதிவு செய்யும் பயணிகள் ஒரு காசு கட்டணத்திலேயே ரூ.10 லட்சம் வரையிலான விபத்து காப்பீடு வசதியை பெறலாம்.
விபத்து காப்பீட்டு திட்டத்தை மேலும் பிரபலம் ஆக்குவதற்காகவும், மேலும் பல பயணிகளுக்கு வாய்ப்பு அளிப்பதற்காகவும் இந்த சிறப்பு சலுகை அறிவிக்கப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. தலைவர் ஏ.கே.மனோச்சா தெரிவித்தார்
No comments:
Post a Comment