இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, October 01, 2016

பிறந்த குழந்தைக்கு ஆதார் பெறுவது எப்படி?


பிறந்த குழந்தைகளுக்கு, 'ஆதார்' பதிவு செய்வது குறித்து, மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஆதார் எண் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும், ஆதார் எண் பதிவு செய்ய, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் பதிவு சட்டத்தில் புதிய திருத்தங்களை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி, அனைத்து மாநிலங்களிலும், ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, ஆதார் எண் பதிவு செய்து கொள்ளலாம். குழந்தைகளின் நலன் கருதியும், உடல் ரீதியான ரேகைகள் வளர்ச்சி குறைந்திருக்கும் என்பதாலும், குழந்தைகளுக்கு மட்டும், 'பயோ மெட்ரிக்' அளவீடு தேவை இல்லை. குழந்தையின் புகைப்படம் மட்டும் பதிவு செய்யப்படும். தாய், தந்தை முகவரி மற்றும் ஆதார் எண், குழந்தையின் ஆதார் எண்ணுக்கு, அடிப்படை தகவலாக சேர்க்கப்படும். குழந்தைக்கும், பெற்றோருக்கும் இடையிலான ரத்த உறவை உறுதி செய்ய, ரேஷன் கார்டு, மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ அட்டை, பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை ஆவணமாக சேர்க்க வேண்டும்.

மேலும், பெற்றோர், தங்களின் ஆதார் அசல் அட்டை மற்றும் நகல்களை, பதிவு செய்யும் மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்; இதில், தாயின் ஆதார் எண்ணுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்த பின், ஐந்து வயது ஆனதும், உடல் ரீதியான பயோ மெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து குழந்தைகளுக்கும், 15 வயது முடிந்ததும், மீண்டும் பயோ மெட்ரிக் பதிவு மேற்கொள்ள வேண்டும் என, திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment