'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு காரணம் கருதி, பிற வங்கி ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்' என, அந்த வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டு மோசடி பேர்வழிகளின் கைவரிசையால், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கி வாடிக்கையாளர்களின், 'டெபிட்' கார்டுகளில் தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களின், 6.5 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மற்ற பொதுத் துறை வங்கிகளும், தங்கள், வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளை முடக்கி உள்ளன. அந்த வகையில், மொத்தம், 32 லட்சம் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, 'பின்' நம்பரை உடனடியாக மாற்றுமாறு, சில தனியார் வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
எனினும், நாட்டில் பயன்பாட்டில் உள்ள மொத்த கார்டுகளில், 0.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் மட்டுமே திருடப்பட்டு உள்ளதாகவும், 99.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், வங்கிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளன. இந்நிலையில், 'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பிற வங்கி, ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்; பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே, இந்த அறிவுரை வழங்கப்படுகிறது; வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்' என, அந்த வங்கியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment