ரேஷன்கார்டில் உள்தாள் இணைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டும் 'ஸ்மார்ட் கார்டு' வழங்குவது ஒவ்வொரு ஆண்டாக தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. . தற்போதுள்ள ரேஷன்கார்டின் பயன்பாட்டுக்காலம் டிச., 31 ல் முடிவடைகிறது. போலி ரேஷன்கார்டுகளை ஒழிக்க 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கு ஆதார் அட்டைக்காக எடுக்கப்பட்ட குடும்பத்தலைவர், உறுப்பினர்களின் பெயர் இதர விபரங்களை பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆதார் அட்டைப்பணி பல மாவட்டங்களில் முழுமையாக முடியாததால் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியும் காலதாமதம் ஆகி வருகிறது.இதனால் இந்த ஆண்டும் 'ஸ்மார்ட் கார்டு' வழங்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் தற்போதுள்ள ரேஷன் கார்டையே பொதுமக்கள் தொடர்ந்து மேலும் ஓராண்டிற்குப்பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக அதில் உள்தாள் இணைப்பு வழங்க முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மாவட்ட வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தற்போதுள்ள ரேஷன்கார்டில் உள்தாள் இணைப்பது குறித்த அறிவிப்பு இம்மாத மத்தியில் வெளியாக உள்ளது,” என்றார்.
No comments:
Post a Comment