தமிழகத்தில் வரும் 2015-16ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தொடங்குவதற்கு வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தொடக்க கல்வி இயக்குனர் கூறியுள்ளார். இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில்,
''அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2015-16ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளி விபர வரைப்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2015-16ஆம் கல்வியாண்டிற்கான தொடக்கப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் மற்றும் உயர் தொடக்கப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பகுதிகளில் புதியதாக தொடக்கப் பள்ளிகள் தொடங்குவதற்கும், தற்போது தொடக்கப் பள்ளிகளாக இயங்கி வரும் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான விண்ணப்பங்களை வரும் 10ஆம் தேதிக்குள் தனி நபர் மூலம் நேரடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment