"10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சியை மாநில அளவிலான தேர்ச்சியை 90ல் இருந்து 95 சதவீதமாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.. சென்னையில் நேற்றுமுன்தினம் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "அடுத்தாண்டு நடக்கும் 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை மாநில அளவில் 90ல் இருந்து 95 ஆக உயர்த்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்காக தலைமையாசிரியர்கள் மூலம் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் வழங்கப்பட்டு சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளது.
6,7,8,9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் எழுதும் திறன், பேசும் திறன், அடிப்படை கணிதத்தை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,”என்றார்.
No comments:
Post a Comment