இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 20, 2014

இசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவு


    இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகியவற்றுக்கான சிறப்பு ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இப்போது சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டில், 1,028 சிறப்பாசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஒருவர் தொடர்ந்த வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். போட்டித் தேர்வு, நேர்காணல் மூலம் சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை அறிவிக்குமாறு அரசுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்தது.

இதையடுத்து, சிறப்பாசிரியர்கள் நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: சிறப்பாசிரியர் நியமனத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்குப் பதிலாக, போட்டித் தேர்வு முறை பின்பற்றப்பட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிலிருந்து தகுதியான நபர்கள் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்க வேண்டும்.

போட்டித் தேர்வு 95 மதிப்பெண்ணுக்கும், நேர்காணல் 5 மதிப்பெண்ணுக்கும் நடைபெறும். போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்பட வேண்டும். இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தயாரிக்கும். இந்தத் தேர்வில் 190 "அப்ஜெக்டிவ் டைப்' வினாக்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு விடைக்கும் அரை மதிப்பெண் வழங்கப்படும். இத் தேர்வுக்கான கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பிரிவினருக்கு ரூ.250.

நேர்காணல் மதிப்பெண் விவரம்:

1. கூடுதல் தகுதி - அரை மதிப்பெண்
2. அரசுத் துறை தவிர துறைகளில் பெற்றுள்ள அனுபவம் - அரை மதிப்பெண்
3. அரசுத் துறைகளில் அனுபவம் - 1 மதிப்பெண்
4. என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டுகள் - ஒன்றரை மதிப்பெண்
5. ஆளுமை, தோற்றம் - ஒன்றரை மதிப்பெண் மொத்தம்-5 மதிப்பெண்கள்

No comments:

Post a Comment