அரசு பள்ளிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாட்களாக அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இரவு காவலர்கள், கோடை விடுமுறையிலும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆசிரியர்களுக்கு வழங்குவது போல, 17 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.பள்ளித் தளவாட பொருட்களின் பாதுகாப்பு கருதி, காவலர்களும் விடுமுறை காலங்களில் முழு நேர பணியில் ஈடுபடுகின்றனர்.
எனவே அவர்களையும் விடுமுறையற்ற பணியாளராக கருதி, அந்நாட்களையும் ஈட்டிய விடுப்பாக கணக்கிட வேண்டும். தற்போது ஓராண்டுக்கு வழங்கப்படும் 17 நாட்கள் ஈட்டிய விடுப்பை, 30 நாட்களாக உயர்த்தும்படி, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கடந்த சட்டசபை மானிய கோரிக்கையின் போது அறிவுறுத்தப்பட்டது.அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வி முதன்மை செயலர் சபிதா அனுப்பியுள்ள உத்தரவில்,
"அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் காவலர்கள், விடுமுறையற்ற பணியாளர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாட்களாக உயர்த்தி அனுமதிக்கப்படுகிறது. இதற்கு உரிய திருத்தங்கள், அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை மூலம் தனியாக வெளியிடப்படும், என உள்ளது
No comments:
Post a Comment