இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி), இடஒதுக்கீடு சலுகையை எளிதில் பெறும் வகையில், அவர்களது சாதிச் சான்றிதழின் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, சாதிச் சான்றிதழில் பெயர், சாதி, மற்றும் அதன் உள்பிரிவுகளை மட்டும் குறிப்பிட இடம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, எந்த விதிகளின்படி குறிப்பிட்ட அந்த சாதி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினராக மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை குறிப்பிட புதிதாக இடம் அளிக்கப்பட்டுள்ளது
. "இந்த விவகாரம் குறித்து, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அதையடுத்து இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சாதிச் சான்றிதழ் மாற்றியமைக்கப்பட்டது. இடஒதுக்கீடு சலுகையை பெறுவதில் உள்ள சிரமங்களை குறிப்பிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று மக்களவையில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment