தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை குறித்த நிலை, தேர்வு தேர்ச்சி சதவீதம், மாணவ, மாணவியரை பற்றிய விவரம் அடங்கிய, புதிய இணைய தளத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார்.
இணைய தளம் குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறியதாவது:
அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும், 1.25 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த தகவல்கள், தீதீதீ.tணண்ஞிடணிணிடூண்.ஞ்ணிதி.டிண இணையத்தில் இடம் பெற்றுள்ளன. அனைத்து மாணவ, மாணவியருக்கும், "ஸ்மார்ட் கார்டு' கொடுக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக, முதல்வரின் தொகுதியில், ஐந்து பள்ளிகளை சேர்ந்த மாணவருக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது.
மற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கும், விரைவில் இந்த "கார்டு' வழங்கப்படும். மாணவரின் புகைப்படத்துடன், அவர் பயிலும் பள்ளி குறித்த விவரங்கள், இந்த கார்டில் இருக்கும். இந்த கார்டை, "பார் கோடு ரீடர்' முறையிலோ அல்லது, கார்டில் உள்ள குறியீட்டு எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்தால், மாணவரைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த, ஐ.டி., கார்டு, "டிசி'க்குரிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், பயிற்சி பெறும் ஆசிரியர், தன் அனுபவம் குறித்த தகவல்களை, இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அது குறித்து, மற்ற ஆசிரியர் கருத்துக்களை பறிமாறிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வரும் காலங்களில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, இந்த இணைய தளம் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தேவராஜன் கூறினார்.
மாநிலத்தின் வரைபடம், மக்கள் தொகை, மொத்தப் பள்ளிகள் எண்ணிக்கை, புதிய மாணவர் சேர்க்கை விவரம், தேர்ச்சி விவரம், மாநிலத்தின் எழுத்தறிவு நிலவரம் உட்பட, 30 தலைப்புகளில், ஏராளமான தகவல்கள் இணைய தளத்தில் தரப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment