பொதுமக்களின் வசதிக்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 24 ஆயிரம் தபால்அலுவலகங்களை, இணையம் மூலம் ஒருங்கிணைக்க, தபால் துறை முடிவு செய்துள் ளது.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சக வட் டாரங்கள் கூறியதாவது:
நாடு முழுவதும், 1.55 லட்சம் தபால் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில், பெரும்பாலான அலுவலகங்கள், பகுதி நேரமாகவும், ஒப்பந்த பணியாளர்கள் மூலமும் செயல்படுகின்றன. பொதுமக்களுக்கு, மேலும் பல வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக, 24 ஆயிரம் தபால் அலுவலகங்களை, இணையம் மூலம் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, 122 தபால் அலுவலகங்கள் இணைக்கப்படவுள்ளன. ஆறு மாதங்களுக்கு பின், மீதமுள்ள தபால் அலுவலகங்கள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதன்மூலம், இந்த தபால் அலு வலகங்களில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இந்த பட்டியலில் உள்ள எந்த அலுவலகத்திலிருந்தும், தங்களின் நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். ஏ.டி.எம்., வசதியையும் பயன்படுத்தலாம்.
இது தொடர்பான தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்துவதற்காக, ஐந்து பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, தொலைத் தொடர்பு அமைச்சக வட்டாரங்கள் கூறின.
No comments:
Post a Comment