தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் சார்பில் 2012-2013ம் கல்வியாண்டிற்கான முதுநிலைப் பட்டப் படிப்புகள், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
முதுநிலை பட்டப்படிப்புகளில், எம்.பி.ஏ (வணிக மேலாண்மை), எம்.எஸ்சி. (கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்), எம்.எஸ்சி. (சுற்றுச்சூழல் மேலாண்மை) என மூன்றுவித படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
முதுநிலை பட்டயப் படிப்புகளில் உணவு நுட்பவியல், உயிர்த் தகவலியல், மூலிகைப் பயிர் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாடு, ஆற்றல் மேலாண்மை, உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதிக்காத பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், தாவர நல கண்காணிப்பு என 7 பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு ரூ.300-க்கான வரைவோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். அல்லது நேரில் ரூ.250- செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் செப்டம்பர் 7-ம் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு, இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003. தொலைபேசி் எண்கள் 0422-6611229. 94421 11048, 94421 11057, 94421 11058.
No comments:
Post a Comment