''பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்,'' என, தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார், மேலும்
பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எப்படி இருக்குமோ என்ற அச்சம், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உள்ளது. எனவே, மாதிரி வினாத்தாள்கள், திங்கட்கிழமை வெளியிடப்படும். பின், தேர்வை எப்படி எழுதலாம் என்ற வழிமுறை உருவாக்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 பாட திட்டங்கள், 12 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.
அதை மாற்றியமைக்க, கல்வியாளர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள், இன்னாள் துணைவேந்தர்களும் இடம் பெற்றுள்ளனர். கல்வியில் முன்மாதிரியாக தமிழகத்தை உருவாக்குவதற்கு ஏற்ப, பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.வரும், 2018- -19ம் கல்வியாண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கும், 2019 - -20ம் கல்வியாண்டில், 2, 7, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், 2020 - -21ம் கல்வியாண்டில், 3, 4, 5, 8ம் வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கை துரிதமாக நடக்கிறது. இதற்காக, 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தயார் செய்து வருகிறோம்.'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
No comments:
Post a Comment