ஆண்டுதோறும் தமிழ்வழிக் கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளை ஒரு மாவட்டத்திற்கு 30 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கும் 960 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு காமராஜர் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் 15 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு காமராஜர் விருதும், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9, 10, 11, 12-ம் வகுப்புகளை கணினி மயமாக்குவதற்காக ரூ.324 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ரூ.1 கோடியே 32 லட்சம் செலவில் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment