தமிழகத்தில் 2017-18ல் 8 கல்லூரிகளில் 32 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2017-18ம் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பிஎஸ்சி, முதுநிலை எம்.காம், எம்.ஏ தமிழ், எம்.பில் இயற்பியல், வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் எம்.பில் தமிழ், பி.எச்டி தமிழ், எம்.பில் வரலாறு, பொன்னேரி அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பி.காம் கூட்டுறவியல், பி.ஏ பொருளியல், எம்.பில் வேதியியல், வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம், எம்.பில் வரலாறு, எம்.பில் தாவரவியல், எம்.பில் வேதியியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகின்றன. அதேபோல் கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் பி.ஏ பொது நிர்வாகம், பி.சி.ஏ, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ தமிழ், எம்.எஸ்சி தாவரவியல், எம்.ஏ ஆங்கிலம், எம்.எஸ்சி புவி அமைப்பியல், சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி தாவரவியல், எம்.பில் இயற்பியல், பி.எச்டி இயற்பியல், செங்கற்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி கணிதம், எம்.ஏ தமிழ், எம்.பில் கணினி அறிவியல், பி.எச்டி கணிதம், பி.எச்டி வேதியியல் என மொத்தம் 32 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரிகள் கல்வி இணை இயக்குநர் பொறுப்பு சுகிர்தராணி ஜூலினா கூறுகையில், ‘தமிழகத்தில் 8 அரசு கல்லூரிகளில் 32 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படுவதாக கல்லூரிகள் கல்வி இயக்குநர் மஞ்சுளா அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் வேலூர், கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றார்.
No comments:
Post a Comment