பி.ஆர்க். (இளநிலை கட்டடவியல் பொறியியல்) சேர்க்கைக்கு முதன் முறையாக தமிழக அளவில் தமிழ்நாடு நுண்ணறித் தேர்வு ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடத்தப்படுகிறது என அண்ணா பலகலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்}லைன் பதிவு திங்கள்கிழமை (ஜூலை 24) முதல் தொடங்குகிறது. பி.ஆர்க். படிப்பில் மாணவர் சேர்க்கை என்பது தேசிய கட்டடக் கலை திறனறித் தேர்வு (நாடா) மூலம் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், நிகழாண்டில் தமிழகத்துக்கு ஒப்பளிக்கப்பட்ட பி.ஆர்க். இடங்களைக் காட்டிலும், தேசியத் திறனறித் தேர்வில் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கட்டடக்கலை கவுன்சிலின் அனுமதியுடன் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் புதிதாக தமிழ்நாடு திறனறித் தேர்வு ஒன்று நடத்தப்படுகிறது. அதன்படி, பி.ஆர்க். சேர்க்கையானது முதலில் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் "நாடா' மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும். இதில் நிரப்பப்படாத இடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும். அதன் பிறகும் காலியாக இருக்கும் இடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு திறனறித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
தேர்வு எப்போது? : இந்தத் தேர்வுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு திறனறித் தேர்வானது (டி.ஏ.நாடா) ஆகஸ்ட் 12} ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்}லைன் பதிவு திங்கள்கிழமை (ஜூலை 24) முதல் தொடங்குகிறது. ஆன்}லைன் பதிவு செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை ஆகஸ்ட் 7}ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 18 }ஆம் தேதி மதிப்பெண் வெளியிடப்படும். மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 19 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவுக் கட்டணம்: தேர்வுக்கான பதிவுக் கட்டணம் ரூ. 2000 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ. 1000 ஆகும்.
No comments:
Post a Comment