சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு – பாரத ஸ்டேட் வங்கி
ரூ. 1 கோடிக்கும் கீழ் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
ரூ.1 கோடிக்கும் கீழ் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கான வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைத்துள்ளதாகவும், ரூ.1 கோடிக்கும் அதிகமான சேமிப்புக்கு 4% வட்டி என்பதில் மாற்றமில்லை எனவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போரில் 90 சதவீதம் பேர் ரூ.1 கோடிக்கும் கீழாகவே சேமிப்பு வைத்துள்ளனர்.பணவீக்க குறைவு மற்றும் அடிப்படை வட்டிவிகித உயர்வு ஆகிய காரணங்களால் இந்த வட்டிவிகிதத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த வட்டிவிகித குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் விலை 3% அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment