இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 24, 2017

5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது

5 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது - மத்திய அரசு கடுமை!
வி.எஸ்.சரவணன்

கல்வி என்பது அனைவருக்கும் சென்றடைய வேண்டும். மேலும், மாணவர்கள் இடை நிற்றல் இல்லாமல் பள்ளிக் கல்வியை முடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழக அரசு 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி/தேர்ச்சியின்மை என்கிற அளவுகோல் கொள்ளாமல், அனைவரையும் ஆல் பாஸாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைக்குத் தமிழக அரசு வருவதற்கு முக்கியக் காரணம், கல்வி குறித்து விழிப்புஉணர்வு அதிகரித்திருக்கும் இந்தச் சூழலில் இடைநிற்றல் தொடர்ந்து வருவதே. இந்தத் திட்டம் மூலம் இடைநிற்றலின் விகிதம் வெகுவாகக் குறைந்துவருகிறது என்று சமூகச் செயல்பாட்டாளர்கள் கூறிவருகின்றனர். மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்படைகிறது என்கிற குற்றச்சாட்டையும் சிலர் வைத்து வருகின்றனர்.

'இந்தித் திணிப்பை ஏற்க மாட்டேன்': கன்னையா குமார் பேச்சு!
இந்நிலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, 5 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஆல் பாஸ் எனும் முறையைக் கைவிடக் கூறியுள்ளது. 5,6,7 மற்றும் 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் தேர்வு வைக்கப்படும். அதில் அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு மே மாதத்தில் மீண்டும் ஒரு தேர்வு வைக்கப்படும். அதிலும் அவர்கள் தேர்ச்சி பெற வில்லையெனில், மீண்டும் அதே வகுப்பில் அடுத்த ஆண்டும் படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் 16-ம் பிரிவின் கீழ் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி கைவிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் 5 மற்றும் 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றன.

இந்த முடிவால் மீண்டும் இடைநிற்றல் அதிகரிக்கக்கூடும் எனக் கல்விச் செயல்பாட்டாளர்கள் தரப்பில் பேசப்படுகிறது. மேலும், 5 முதல் 8-ம் வகுப்பு வரை என்பது ஒன்றாம் வகுப்பு முதலே கட்டாயத் தேர்ச்சி கைவிடப்படும் எனும் செய்திகள் உலவுகின்றன.

No comments:

Post a Comment