ஜூலை 23-ல் பொதுப் பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு..! அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
கார்த்திக்.சி கே.ஜெரோம்
பொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவுக்குரிய கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'நீட் தேர்வு முடிவு காலதாமதமானதால் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை விரைவில் நடத்த முடியாமல் போனது. இதுவரையில் ஒரு லட்சத்து 41,077 மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். பழைய கலந்தாய்வு முறையை நடத்தும் பட்சத்தில் 35 நாள்கள் தேவைப்படும்.
ஜூலை 17, 18-ம் தேதிகளில் தொழில் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. 19-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். 19 மற்றும் 20-ம் தேதிகளில் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும். 21-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும். அடுத்து வரவுள்ள கல்வியாண்டு முதல் இணைய வழி கலந்தாய்வு நடைபெறும். அதனால் மாணவர்களுக்குரிய நேர விரயம் மற்றும் அலைச்சல் குறையும்' என்றார்
No comments:
Post a Comment