இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 26, 2017

பிஇ படிப்பில் இந்தாண்டு புதிய பாடத்திட்டம்: அண்ணா பல்கலை அறிவிப்பு


அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வி மன்றக்குழுக் கூட்டம், உயர்கல்வித்துறை செயலர் சுனில்பாலிவால் தலைமையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்தது. கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் 2017-2018ம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் திருத்தி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், முதலாம் ஆண்டு பிஇ படிப்பவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அண்ணா பல்கலைக் கழக கல்வி மன்ற இயக்குநர் மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வருமான கீதா கூறியதாவது:

அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில் 41 பிரிவுக்கும், முதுநிலைப் பட்டப் படிப்பில் 57 பாடப்பிரிவுக்கும் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு புதிய பாடத்திட்ட குழு தயாரித்துள்ள புதிய பாடத்திட்டம் இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டது. மேலும், கலைத் திட்டம், அடிப்படை அறிவியல், பொறியியல் அறிவியல், தொழில் கல்வி தொடர்பான பாடங்கள், தற்போது பிஇ, பிடெக் பட்டப்படிப்புடன் கலை அறிவியல் பிரிவுகளை எடுத்து படிக்கும் மானவர்கள் தொழில்நுட்ப பாடங் களைவிருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம்.

அதேப்போல் பிடெக் படிப்பவர்கள் கலை அறிவியல் பாடங்களை விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம். இதனால் மாணவர்களுக்கு வேலைத் திறன் பெற வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண் அளிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தில் தோல்வியுற்றால், அது மதிப்பெண் பட்டியலில் தோல்வி என்று இடம் பெறாது. ஆனால் அவர்கள் தோல்வி அடைந்த அந்த பாடத்தை அடுத்த முறை எழுதும் போது அகமதிப்பீடு மற்றும் எழுத்து தேர்வும் சேர்த்து எழுத வேண்டும். மாணவர்–்கள் படிக்கும் போது இடையில் விட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பட்டப் படிப்பை செமஸ்டர் முறையில் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒரு பட்டப் படிப்பை முடிப்பதற்கான காலக் கெடு முடிந்த பிறகும் அடுத்த 3 ஆண்டுக்குள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள 14 செமஸ்டர்கள் கொண்ட படிப்பை அதற்கு பிறகு 3 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். பிற்சேர்க்கை திட்டத்தில்(Lateral Entry) 12 செமஸ்டர்கள் கொண்ட படிப்பில் சேர்வோருக்கும் இது பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment