கல்வித்துறையில், யார், எந்த கருத்துக்களை கூறினாலும், அதையேற்று, மாற்றங்களை கொண்டு வர, தமிழக அரசு தயாராக உள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசு, கல்வித்துறையில், பல திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக, செயல்படுத்தி வருகிறது. அதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வில், சென்ற ஆண்டை விட, 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில், ஒட்டு மொத்த மாணவர்கள் தேர்ச்சி, 92.1 சதவீதம் என்பது, தமிழக வரலாற்றில் முதன்முறை. தமிழக சட்டசபை, விரைவில் கூட உள்ளது. அப்போது, ஸ்டாலின் அவரது கருத்துக்களை கூறலாம்.
கல்வித்துறையில், யார் எந்த கருத்துக்களை கூறினாலும், அதையேற்று, பல்வேறு மாற்றங்களை கொண்டு வர, அரசு தயாராக உள்ளது. கல்வித்துறை மானிய கோரிக்கையில், பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment