இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 29, 2017

மாணவர் சேர்க்கை அரசு சட்டக் கல்லூரியில் ஜூன் 2 முதல் விண்ணப்பம் வினியோகம்


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி, மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் பிஏஎல்எல்பி(5 ஆ ண்டுகள்), எல்எல்பி(3 ஆண்டுகள்) சட்டப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. 5 ஆண்டு படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூன் 2ம் தேதி முதல் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 3ஆண்டுக்கான படிப்புக்குரிய விண்ணப்பங்கள் ஜூன் 7ம் தேதி முதல் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், பூம்பொழில், எண் 5, டாக்டர் டிஜிஎஸ் தினகரன் சாலை, சென்னை-28 முகவரியில் பெற்றுக் கொள்ள வேண்டும். தபாலில் பெற விரும்புவோர் விண்ணப்ப கேட்புக் கடிதம் மற்றும் எந்த பாட பிரிவு படிக்க விரும்புகிறார் என்பதை குறிப்பிட்டு எழுத வேண்டும். மேலும், இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரி, விழுப்புரம், தர்மபுரி, ராமநாத புரம் சட்டக் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலங்களில் நேரில் சென்று கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகள் இணைத்து, சட்டப் பல்கலைக் கழக, ‘‘தலைவர், சட்டப் படிப்பு சேர்க்கை 2017-2018’’ என்பவரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சென்று சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். அல்லது இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகளின் முதல்வர்கள், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் சட்டக் கல்லூரிகளின் முதல்வர்கள், குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் ஜூன் 23 மற்றும் ஜூலை 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment