அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க அண்ணா பல்கலைகழகத்தின் ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. அப்போது முதலே பொறியியல் படிக்க விரும்பிய மாணவர்கள் அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கினர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 12ம் தேதி வெளியானது. தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் ஜூன் 3ம் தேதிக்குள் தபால் மூலமோ நேரிலோ அண்ணா பல்கலைகழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து ஜூன் 22ம் தேதி இன்ஜினியரிங் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாக உள்ளது.
இந்தநிலையில், அண்ணா பல்கலைகழகத்தின்கீழ் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்தவற்கு இன்று கடைசி நாளாகும்.
No comments:
Post a Comment