தமிழகம் உள்பட நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு 104 நகரங்களில் இன்று நடக்கிறது. அதற்காக, 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் நீட் ேதர்வுக்கு விலக்கு கோரி சட்டசபையில் பிப்ரவரி 1ம் ேததி மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக 11 லட்சத்து 35,104 மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூரில் இந்த தேர்வு நடக்கிறது. நாடு முழுவதும் 104 நகரங்களில் 1,500க்கும் அதிகமான மையங்களில் தேர்வு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, அசாமி, ஒரியா ஆகிய 10 மொழிகளில் இந்த தேர்வை மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வு முடிவுகளை ஜூன் 8ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தேர்வு முடிந்த சில நாட்களில் மாணவர்களின் ஓஎம்ஆர் சீட், விடைத் தொகுப்பு (ஆன்சர் கீ) வெளியிடப்படும். இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மத்திய அரசு 15 சதவீத இடங்களுக்கும், மாநில அரசுகளின் மருத்துவ கல்வி இயக்ககங்கள் 85 சதவீத இடங்களுக்கும் கவுன்சலிங் நடத்தி மாணவர் சேர்க்கை நடத்துவார்கள்.
எது முக்கியம்: நீட் தேர்வின்போது பின்பற்ற வேண்டியது குறித்து, சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: மாணவர்கள் காலை 9.30 மணிக்கு பின் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 9.45 மணிக்கு தேர்வு புத்தகம் வழங்கப்படும். காலை 9.55 மணிக்கு சீலிடப்பட்ட தேர்வு புத்தகத்தை மாணவர்கள் திறக்கலாம். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடக்கும். விடைத்தாளை கருப்பு அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனா பயன்படுத்தி மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும்.
ஹால்டிக்கெட்டில் தவறான புகைப்படம், ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் மாணவர்கள் தங்களின் ஆதார் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உடன் எடுத்து வர வேண்டும்.
கட்டுப்பாடுகள்
மாணவர்கள் அரைக்கை சட்டை, முழுக் கால் சட்டை (பேன்ட்) அணிந்து வர வேண்டும். மாணவிகள் சுடிதார் அணிந்து வர வேண்டும். காதணிகள், மூக்குத்தி, நகைகள் அணிந்து வரக்கூடாது. பெல்ட், ஷூ, வாட்ச் அணிந்து வரக்கூடாது. செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். உரிய சோதனைக்கு பின்னரே எல்லோரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
720 மதிப்பெண்
மத்திய அரசு பாடத்திட்டத்தின்கீழ் இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்படும். 720 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
சென்னை மையங்கள்
சென்னையில் கேந்திர வித்யாலயா பள்ளிகள், அண்ணா நகர் எஸ்பிஓஏ பள்ளி, சென்னை பப்ளிக் ஸ்கூல், சின்மயா வித்யாலயா, சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி ஸ்கூல் உள்பட 50க்கும் அதிகமான மையங்களில் தேர்வு நடக்கிறது.
கட்டாயம் எடுத்துசெல்ல வேண்டியபொருட்கள்
1 ஹால்டிக்கெட்
2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
3 தபால் அட்டை அளவிலான புகைப்படம்
4 கருப்பு அல்லது நீல நிற பால் பாயின்ட் பேனா
No comments:
Post a Comment