அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் பிற்சேர்க்கை திட்டத்தின் கீழ் நேரடியாக இரண்டாம் ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளில் 17ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் திரும்ப ஒப்படைத்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களான பிஇ, பிடெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. பொறியியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் டிப்ளமோ படித்தவர்கள், பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் பி.இ, பிடெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரத் தகுதி உடையவர்கள்.
மேற்கண்ட தகுதி உடைய மாணவர்கள் ஆன்லைன் மூலம் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஜூன் 14ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு அதன் நகலை எடுத்து அத்துடன் ரூ.300க்கான டிடியை இணைத்து அனுப்ப வேண்டும். டிடி எடுக்கும் போது ‘செயலாளர், இரண்டாம் ஆண்டு பிஇ, பிடெக் பட்டப் படிப்பு சேர்க்கை 2017-2018, ஏசிசிஇடி, காரைக்குடி’ என்ற முகவரி பெயருக்கு டிடி எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி எஸ்சிஏ, பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் இல்லை. இது தொடர்பான கூடுதல் விவரம் வேண்டுவோர் www.acceet.co.in, www.accet.edu.in, www.accetlea.com ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 14ம் தேதிக்குள் ‘செயலாளர், இரண்டாம் ஆண்டு பிஇ, பிடெக் சேர்க்கைகள் 2017-2018, அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, காரைக்குடி-630004 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
No comments:
Post a Comment