மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று (டிசம்பர் 6) பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு இன்று (டிசம்பர் 6) பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment