தமிழக அரசின் ஆசிரியர் தகுதி தேர்வு முறை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெயிட்டேஜ் முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டது. இதன் காரணமாக 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகத்தில் நடைபெறவில்லை.
தமிழக அரசின் அரசாணை விபரம்:-
தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்படுவதுடன், வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பெண் விலக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியில்லை என்றும் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு இருக்கும்.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு சரி என்றும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமானது என்றும் கூறப்பட்டது. ஒரே வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment