ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்தெரிவித்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவு உள்ளிட்ட பல்வேறு மக்களுக்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதமாக மத்திய அரசு விதித்திருந்த தகுதி மதிப்பெண்ணை 55ஆக குறைத்தார். அதில், 80 ஆயிரம் பேருக்கு மேல் வெற்றிபெற்றும் அதற்கான பயன் கிடைக்காமல் இருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 55 சதவீத மதிப்பெண் என்ற முடிவுக்கு, தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நற்சான்று அளித்திருக்கிறது. இதற்கான உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது என்ற முடிவை ஒரு வருட சட்டப் போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியுமோ அவ்வளவு பேருக்கும் உருவாக்கித் தரப்படும் என்றார்.
No comments:
Post a Comment