"இளமையில் கல்வி, பசுமரத்தாணி" என்று கூறுவார்கள். அதற்கு ஏற்றார் போல்தான் குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். ஆனால், அவ்வாறு செய்தல், குழந்தைகளுக்கு ஒரு நல்ல அனுபவமாக அமைகிறதா என்பது கேள்விக் குறிதான். மாணவர்கள், கல்வியை சுகமாக பார்ப்பதை விட, சுமையாக பார்ப்பதுதான் அதிகம் என்பது சோகமான உண்மை.
இதனை தவிர்க்க ஒரு "இன்டராக்டிவ்" கல்வி முறையை அமைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் பரிந்துரை. அதன் முதல்படியாக 3D படங்களைக் கொண்ட ஒரு ஆண்ட்ராய்ட் ஆப்பை பள்ளி கல்வித் துறையின் தகவல் மற்றும் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ளது.
என்ன செய்யும் இந்த ஆப்?
பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகம். அந்த வருட தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் தான் வாழ்வில் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடியும் என்ற கட்டாயம்.
என்னதான் முழு புத்தகத்தையும் மனப்பாடம் செய்து அப்படியே தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், படிக்கும் பாடங்களை புரிந்து படிப்பதால் வரும் சுவையான அனுபவம் தனி சுகம்தான். இதனை ஊக்குவிக்கதான் இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை கூறியுள்ளது.
தகவல் அடையாள தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆப், கேமராவை பயன்படுத்தி புத்தகத்தை ஸ்கேன் செய்து கொள்ளும். புத்தகத்தில் என்ன தகவல் இருக்கின்றதோ அதன் 3D அல்லது 2D படம் உடனே ஆப்பில் காண்பிக்கப்படும்.
தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
"கிட்டத்தட்ட 141 பாடங்களை நாங்கள் இந்த ஆப்பில் காண்பிக்க வழி வகுத்துள்ளோம். இந்த ஆப்பை எந்த ஆண்ட்ராய்ட் போனிலும் பயன்படுத்தலாம். எங்கள் வசம் உள்ள அனைத்து தொழில்நுட்பத்தையும் வைத்து, தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மையம் இந்த ஆப்பை வடிவமைத்துள்ளது. தகவல் அடையாள தொழில்நுட்பம் முதன் முறையாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. அது தமிழ் புத்தகங்களில் பயன்படுத்தப்படுவது மிகவும் பெருமையாக உள்ளது.
முழுக் கவனம் செலுத்துவதற்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றோம். 1600 ஆசிரியர்களுக்கு ஆப்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 240 ஆசிரியர்கள் சேர்ந்துதான் பாடங்களில் எது தேவையானப் பிரிவு என்று முடிவு செய்து கொடுத்தார்கள்.", என்றார் பள்ளி கல்வத் துறையின் செயலாளர் சபீதா.
"அனைத்து மாணவர்களிடமும் ஆன்ட்ராய்ட் போன் இருக்க வாய்ப்பு குறைவு என்பதால் பள்ளிகளில் இருக்கும் கணினிகளில் பயன்படுத்தும் வகையில் சி.டிகளை அளிக்கப்போகிறோம்.", என்றார் தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மைய துணை பேராசிரியர் அசிர் சூலியஸ்.
எப்படி பயன் படுத்துவது?
ஆன்ட்ராய்ட் ப்லே ஸ்டோரில் "TN SCHOOLS LIVE" என்ற ஆப்பை டவ்ன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
அப்பை ஓபன் செய்ததும் பத்தாம் வகுப்பா பன்னிரெண்டாம் வகுப்பா என்று செலக்ட் செய்து விட்டு, புத்தகத்திற்கு நேராக கேமராவை காண்பிக்க வேண்டும்.
அந்த ஆப் புத்தகத்தில் இருக்கும் தகவலை அடையாளம் கண்டு, அதற்கேற்ற 3D புகைப்படங்களை காண்பிக்கும்.
கூடிய விரைவில் இந்த ஆப் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மொத்த பாடத்திட்டத்தையும் கவர் செய்யும்
No comments:
Post a Comment