இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 09, 2015

பெண்கள் குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாகிறது

சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு : பெண்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகிறது; ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.  கிராமப்புறங்களில் இந்த உத்தரவு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்ற அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், கடந்த ஜூன் 8ஆம் தேதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு ஜூன் 18ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் கடந்த மாதம் 10ஆம் தேதி இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது சமூக ஆர்வலர் நிம்மு வசந்த் ஆஜராகி, பெண்கள் மற்றும் குழந்தைகள், வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், ஆவணங்கள் பறிமுதல் செய்யும் உத்தரவை திரும்பபெற வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறினார். நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

* சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனை மாற்றும் விதமான உத்தரவை பிறப்பிக்க கோருவது ஏற்க முடியாது. சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடும் போது கோர்ட்டை மனுதரார் குறைகூற முடியாது.

* அரசியல் அமைப்பில் குடிமக்களை காப்பாற்றும் கடமை ஒரு அரசின் கடமை. அதனை மனுதரார் மறந்து விட்டார். கட்டாய ஹெல்மட் அணிந்து செல்வதால் விபத்து குறைய வில்லை என்பதை ஏற்க முடியவில்லை என்பதற்கான எந்த ஆதாரமும் மனுதராரிடம் இல்லை.

* பெண்கள், குழந்தைகள் கட்டயாம் ெஹல்மட் அணிய வேண்டும். இதை மாற்ற முடியாது.

* புறநகர் மற்றும் மற்ற மாவட்டங்களில் குறிப்பாக கிராமங்களில் முறையாக ஹெல்மட் விதிகளை அமல்படுத்தப்படுவதாக தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் அமல்படுத்தாக மாவட்ட எஸ்.பி.க்கள் நேரில் ஆஜராக நேரிடும்.

* இந்தச் சட்டம் மாநிலம் முழுதும் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

‘உங்கள் மனுவும் தள்ளுபடி ஆகியிருக்கும்’

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பால்கனகராஜ் ஆஜராகி, ‘எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதா’ என கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதி, ‘நீங்கள் மனுத்தாக்கல் செய்யாமல் ஆஜராகி வாதிட்டீர்கள், அதனால் உங்களுக்கு உத்தரவு ஏதும் இல்லை; மனுத்தாக்கல் செய்திருந்தாலும் தள்ளுபடிதான் ஆகியிருக்கும்’ என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச் ெஹல்மட் கட்டாயம் என்ற உத்தரவு எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்ததால் தற்போது நான் பிறப்பித்த உத்தரவு நீடிக்கிறது என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

மூத்த பெண்மணி என்பதால் அபராதம் விதிக்கவில்லை

‘அரசின் நடவடிக்கைக்கு பிறகு  விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ள நிலையில் இவ்வாறு வழக்கு  தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோர்ட்டின் நேரத்தை மனுதரார்  வீண்டித்துள்ளார். அதிகப்படியான அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய  உகந்த வழக்காக இருந்தாலும், வழக்குத் தொடர்ந்தவர் மூத்த பெண்மணி மட்டுமல்ல,  சமூக ஆர்வலர் என்பதாலும் அபராதமில்லாமல் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment