"ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும்,' என வலியுறுத்தி, திருப்பூரில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது; 250 பெண்கள் உட்பட 400 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், பணி பாது காப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியும், சங்க நிர்வாகிகள் பேசினர்."
கவுரவமானதாக கருதப்பட்ட ஆசிரியர் பணி, இன்று, அச்சத்துக்குரியதாக மாறிவிட்டது. மாணவர்களை கண்டித்தால், ஆட்களை திரட்டி வந்து தாக்குகின்றனர். பெண் ஆசிரியர்களை, மாணவர்கள் கேலி செய்வது அதிகரித்துள்ளது. இப்பிரச்னைகளுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ் கணேஷ் குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ஜோசப் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
சி.இ.ஓ., விசாரணை : ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில், முதன்மை கல்வி அலுவலர் முருகன் நேற்று விசாரணை நடத்தினார். நடந்த சம்பவம் குறித்து, தாக்கப்பட்ட ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்டபோது, ""பிரச்னை தொடர்பாக நேரில் வருமாறு, மாணவியரின் பெற்றோர் அழைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம், இனி நடக்காமல் தடுக்க, இரு தரப்பினருக்கும் தகுந்த அறிவுரை வழங்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment