'ஊதிய உயர்வு அளிக்க முடியாது' என அரசு அறிவித்துள்ளதால் மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்கி அரசுக்கு எதிராக போராட ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களை போல் அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. 'மத்திய அரசு ஆசிரியர்களை போல் ஊதிய உயர்வு அளித்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி வரை கூடுதலாக செலவாகும். இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர் சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதனால் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்க அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் தனித்தனியாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் கிப்சன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் '1989 ல் இருந்து பெற்றுவந்த ஊதிய உரிமையை மீண்டும் பெற அனைவரும் ஒருங்கிணைந்து போராட தயாராக வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment