வங்கி கணக்கு அவசியம் டிசம்பர் 15,2014 இன்றுகடந்த வாரம்கடந்த மாதம் கருத்தைப் பதிவு செய்ய Colors: எழுத்தின் அளவு: Advertisement பதிவு செய்த நாள் 16டிச 2014 00:30 மதுரை: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் வசதி குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்பட்டதால் மீண்டும் கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. 'அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்; குறிப்பிட்ட காலத்திற்குள் கல்வித்துறை அதிகாரிகள் அவற்றை உறுதி செய்ய வேண்டும்' என கோர்ட் உத்தரவிட்டது.
கழிப்பறைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் என மூன்று வகையில் கணக்கெடுக்கப்பட்டன. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எண்ணிக்கையில் இருந்தன. மேலும், தனியார் அமைப்புகள் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முன்வந்தபோது, கணக்கெடுப்பில் இல்லை என்று குறிப்பிட்டிருந்த பள்ளிகளில் கழிப்பறை இருந்ததாகவும், சில பள்ளிகளில் கழிப்பறை கட்டுவதற்கு இடம் இல்லாததும் தெரிந்தது.
இதனால் குழப்பமடைந்த அதிகாரிகள், உண்மை நிலவரம் குறித்து அறிய மீண்டும் தலைமை ஆசிரியர்களை அழைத்து விபரங்கள் சேகரிக்க உத்தரவிட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் நேற்று, தலைமை ஆசிரியர்களை அழைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் விபரங்கள் சேகரிக்க துவங்கியுள்ளனர். இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் உள்ளன. ஆனாலும் கோர்ட் உத்தரவுக்கு பின் கல்வித் துறை மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது 'ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா' மற்றும் 'நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்' போன்றவை கழிப்பறை வசதி செய்துகொடுக்க முன் வந்துள்ளன. இதற்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முரண்பாடு இருந்ததால் தலைமை ஆசிரியர்களிடம் சரியான விபரங்கள் கேட்கப்பட்டது, என்றார்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், ''என்.எல்.சி., சார்பில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 600 கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளது. இதில் மதுரைக்கு 50 ஒதுக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
No comments:
Post a Comment