அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை(வெள்ளிக்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அன்று 60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 14 வகையான கல்வி பொருட்கள் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான விலை இல்லா பொருட்களை தமிழக அரசு, பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு வழங்கி வருகிறது.
மேலும் மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க அரசு முடிவு எடுத்து, அதன் காரணமாக காலாண்டு தேர்வு வரை தேவையான புத்தகங்களை முதல் பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 2–வது பருவ புத்தகங்கள் என்றும், அரையாண்டுக்கு பின்னர் இறுதி ஆண்டு தேர்வு வரையிலான புத்தகங்கள் 3–வது பருவபுத்தகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. அவ்வாறு அந்தந்த பருவத்திற்கு பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் ஆகியவை 1–ம் வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பள்ளிக்கூடங்கள் திறந்த அன்றே வழங்கப்பட்டு வருகின்றன.
நாளை பள்ளிக்கூடம் திறப்பு அதன்படி அரையாண்டு தேர்வு முடிந்து இப்போது விடுமுறை நடைபெற்று வருகிறது. விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜனவரி 2–ந்தேதி திறக்கப்படுகின்றன. அன்றே பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு பாட நூல் நிறுவன நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார்.
திட்டமிட்டபடி பாடப்புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் மாணவ–மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறந்த 2–ந்தேதி காலையிலேயே வழங்கப்படும் என்றும் மொத்தம் 60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment